4 மாத குழந்தையின் உலக சாதனை... 120 பொருட்களை அடையாளம் காணும் ஆச்சர்யம்!

By காமதேனு

ஆந்திராவில் பிறந்து 4 மாதங்களே ஆன பெண் குழந்தை, உலக சாதனை படைத்த சம்பவம் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

குழந்தையின் பெற்றோர்

சாதனைக்கு வயது ஒரு தடையே இல்லை என்பதை 4 மாத குழந்தை, இந்த உலகிற்கு உறுதிப்படுத்தியுள்ளது. ஏனென்றால், பல்வேறு காரணங்களை கூறி, சோம்பறித்தனத்தால் வாழ்வில் இலக்கை அடைய முடியாமலும், சாதனையை தள்ளிப்போடுவதிலும் பெரும்பாலானவர்களின் செயல்பாடாக உள்ளது. ஆனால், இதை எல்லாம் கடந்து, கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியால், சத்தமில்லாமல் சாதனையை நிகழ்த்தும் பலபேர், நம்மிடையே உள்ளனர். அந்த வகையில் இந்த குழந்தை செய்த தரமான சம்பவம், கொஞ்சம் வித்தியாசமானதுதான்.

ஆந்திர மாநிலம், நந்திகாமா நகரை சேர்ந்த ஹேமா என்பவருக்கு, 4 மாதங்களுக்கு முன்பாக பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்தக் குழந்தைக்கு கைவல்யா என்று பெயர் வைத்து ஆசையாக வளர்த்து வருகிறார். கொஞ்சம் தாலாட்டோடு, பல்வேறு விசயங்களையும் கற்றுக் கொடுத்துள்ளார். காய்கறி, பழங்கள், பறவைகள், புகைப்படங்கள் காட்டி அதனுடைய பெயர்களை சொல்லிக் கொடுத்து, அதனை அடையாளம் காட்டும்படி கூறியுள்ளார்.

அந்தக் குழந்தை அசால்டாக, தாய் சொல்லும் பொருட்களை எளிதாக அடையாளம் கண்டுள்ளது. மொத்தம் 120 வெவ்வேறு பொருட்களை குழந்தை அடையாளம் கண்டுபிடித்துள்ளது. குழந்தையின் திறமையை உலகிற்கு காட்டுவதற்காக அவரது தாய் ஹேமா, அதை வீடியோவாக எடுத்து நோபல் உலக சாதனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

அந்த வீடியோவை பார்த்த Noble World Records குழுவினர், அக்குழந்தை உலக சாதனைக்கு தகுதியானவர் என்று அங்கீகரித்து குழந்தைக்கு சிறப்பு சான்றிதழை வழங்கியுள்ளனர். இதன் மூலம் பிறந்து 4வது மாதத்தில் உலக சாதனையாளர் பட்டியலில் குழந்தை இடம்பிடித்துள்ளது. இந்த சாதனை மூலம் குழந்தையின் பெற்றோர், மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...


இளம் விஞ்ஞானிகளை உருவாக்கும் திட்டம்: நாளை முதல் மாணவர்கள் விண்ணப்பிக்க இஸ்ரோ அழைப்பு!

மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு ரூ.13,720 கோடி; கோவையில் கலைஞர் நூலகம்: பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு!

தஞ்சையில் ரூ.120கோடியில் சிப்காட்; ரூ.2483 கோடியில் விருதுநகர், சேலத்தில் ஜவுளிப் பூங்கா: பட்ஜெட்டில் அறிவிப்பு!

பயங்கரம்... பழங்குடி சமூகத்தினர் இடையே நடந்த மோதலில் 64 பேர் சுட்டுக்கொலை!

பகீர்... நடுரோட்டில் மனைவியை வழிமறித்து தீ வைத்த கணவன்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE