'தமிழ் புதல்வன் திட்டம்' அறிமுகம்... 3 லட்சம் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை! - பட்ஜெட்டில் அறிவிப்பு

By காமதேனு

"அரசுப் பள்ளிகளில் படித்து உயர் கல்வியில் சேரும் மாணவர்களுக்கு 'தமிழ் புதல்வன்' என்ற திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும்" என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

நிதி நிலைஅறிக்கை வாசிக்கும் அமைச்சர் தங்கம் தென்னரசு

அரசுப் பள்ளிகளில் படித்து உயர் கல்வியில் சேரும் மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.1000 மாதாந்திர கல்வி உதவித் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. 'புதுமைப்பெண் திட்டம்' என்ற பெயரிலான இந்த திட்டத்தின்படி அரசுப் பள்ளி மாணவிகள் பயன்பெற்று வந்த நிலையில் இன்றைய நிதிநிலை அறிக்கையில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கும் இந்த உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த திட்டம் மாணவர்களுக்கும் விரிவு படுத்தப்பட்டுள்ளது. அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்களை சாதனையாளர்களாக உருவாக்கிடவும் உயர் கல்வி சேர்க்கையை அதிகரிக்கவும் ’தமிழ் புதல்வன்’ என்ற மாபெரும் திட்டம் தொடங்கப்படுகிறது.

தலைமைச் செயலகம்

இந்த 'தமிழ் புதல்வன்' திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் பயின்று, உயர் கல்வியில் சேரும் மாணவர்கள் பாட புத்தகம், பொது அறிவு நூல்கள் மற்றும் இதழ்களை வாங்கி அவர்கள் கல்வியை மெருகேற்ற உதவிடும் வகையில் மாதந்தோறும் அவர்களது வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் செலுத்தப்படும். ரூ. 360 கோடியில் 'தமிழ் புதல்வன் திட்டம்' செயல்படுத்தப்படும் என்று தங்கம் தென்னரசு நிதி நிலை அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அரசுப் பள்ளிகளில் ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்த மாணவர்களுக்கு அவர்களின் உயர்கல்விக்கு மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மூன்று லட்சம் மாணவர்கள் பயன் பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


இன்றே கடைசி தேதி... இந்திய ரயில்வேயில் 5,696 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்!

இன்று தமிழக பட்ஜெட் 2024 தாக்கல்... இடம் பெறுகிறது மாபெரும் ஏழு தமிழ் கனவுகள்!

அடுத்தக் கட்ட அதிரடி ... நடிகர் விஜய் கட்சி நிர்வாகிகள் இன்று திடீர் ஆலோசனை!

மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி?... விமான நிலையத்தில் கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி!

21ம் தேதி முதல் மீண்டும் போராட்டம் தொடரும்: 4வது சுற்று பேச்சுவார்த்தைக்குப் பின் விவசாயிகள் அறிவிப்பு!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE