தேர்வு நடந்து கொண்டிருந்த போது மாணவர் ஒருவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மணிப்பாலில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் சத்திய சுமன்(19). இவர் கர்நாடகா மாநிலம், மணிப்பால் மாஹே பல்கலைக்கழகத்தில் (Manipal College of Health Professions) இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு இன்று தேர்வு நடந்துள்ளது. இதற்காக அவர் தேர்வு எழுத அறைக்கு வந்துள்ளார்.
ஆனால், வினாத்தாளைப் பார்த்தடன் கவலையுடன் வெளியே ஓடி வந்துள்ளார். அத்துடன் கட்டிடத்தில் இருந்து கீழே குதித்தார். இதைப் பார்த்த மாணவர்கள், பேராசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனால் தேர்வு அறையில் இருந்த மாணவர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடினர். ஆனால், சம்பவ இடத்திலேயே சத்திய சுமன் தலையில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து மணிப்பால் போலீஸார், விரைந்து வந்து மாணவர் சத்திய சுமன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மாணவர் சத்திய சுமன், உண்மையில் தேர்வு பயத்தால் தான் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா என்பது குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேர்வு எழுதிக் கொண்டிருந்த மாணவர், மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்த சம்பவம் மணிப்பாலில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
‘ஜோக்கர் இப்போ ஹீரோவானேன்...’ நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்தநாள் ஸ்பெஷல்!
மிஸ் பண்ணிடாதீங்க... இன்று 17 மாவட்டங்களில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!
டெஸ்ட் போட்டியில் இருந்து திடீரென விலகிய அஸ்வின்... ஐசிசி விதியால் சிக்கலில் இந்திய அணி!
அதிர்ச்சி வீடியோ... யானையை காரில் துரத்திய அதிமுக பிரமுகர்: ரூ.1 லட்சம் அபராதம் விதித்த வனத்துறை!
அதிமுக ஆட்சியில் அனைத்து பெண்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை - எஸ்.பி.வேலுமணி உறுதி!