சர்வதேச தரத்தில் டிசைன் துறையில் சிறந்த உயர்கல்வியை பெற விரும்புவோர், புகழ் பெற்ற ’பிட்ஸ் பிலானி’ நிறுவனம் புதிதாக தொடங்கும் டிசைன் ஸ்கூலுக்கும் விண்ணப்பிக்கலாம்.
பிளஸ் 2 முடித்ததும் உயர்கல்வியாக என்ன படிக்கலாம் என்ற ஊசலாட்டம், அந்த மாணவ மாணவியரை கொண்ட குடும்பங்களில் இப்போதே தொடங்கியிருக்கும். அவர்களில் வடிவமைப்பு சார்ந்த துறையில் உயர்கல்வி பெற விரும்புவோருக்கு பிட்ஸ் பிலானியின் புதிய டிசைன் ஸ்கூல் காத்திருக்கிறது.
என்ன படிக்கிறோம் என்பதோடு அதனை எங்கே படிக்கிறோம் என்பதும் முக்கியம். ராஜஸ்தானின் பிலானியில் செயல்படும் ’பிர்லா தொழில்நுட்ப மற்றும் அறிவியல் நிறுவனம்’ (Birla Institute of Technology & Science), சுருக்கமாக ’பிட்ஸ் - பிலானி’ மிகவும் பிரபலமானது. ஐஐடி-க்கு நிகரான உயர்கல்வியை இங்கே பெறலாம். இந்த புகழ்வாய்ந்த கல்வி நிறுவனம், தற்போது டிசைனிங் துறையிலும் புதிய உயர்கல்வி நிறுவனத்தை தொடங்கி உள்ளது. வரும் கல்வியாண்டு முதல் இது செயல்பட உள்ளது.
மும்பை பெருநகரத்தில் சுமார் 63 ஏக்கர் பரப்பளவில், ரூ1500 கோடி செலவினத்தில் பிட்ஸ் பிலானியின் புதிய டிசைன் துறை கல்லூரி, ‘பிட்ஸ் டிசைன் ஸ்கூல்’ என்ற பெயரில் தொடங்கப்படுகிறது. ஃபின்லாந்தின் ஆல்டோ பல்கலைக்கழகம், மெல்போர்னின் ஆர்எம்ஐடி ஸ்கூல் ஆப் டிசைன் ஆகியவற்றுடன் இணைந்து, பிட்ஸ் டிசைன் கல்லூரி மும்பையில் செயல்பட இருக்கிறது.
2024 - 2025ம் கல்வியாண்டுக்கான சேர்க்கை பிப்ரவரி 26 அன்று தொடங்குகிறது. 4 வருடங்களுக்கு அங்கேயே தங்கியிப் பயிலும் இளங்கலை வடிவமைப்பு (ஹானர்ஸ்) திட்டத்தை பிட்ஸ் டிசைன் ஸ்கூல் அறிமுகப்படுத்துகிறது. தொடர்ந்து அதே துறையில் 2 ஆண்டு முதுநிலைப் படிப்பையும் பிட்ஸ்-டிசைன் ஸ்கூல் மும்பை வளாகத்திலேயே பெற முடியும்.
டிசைனிங் துறையில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு அருமையான வாய்ப்பு பிட்ஸ் டிசைன் ஸ்கூலில் காத்திருக்கிறது. முதலாம் ஆண்டில் அனைவருக்கும் பொதுவான பாடங்களே இருக்கும். இரண்டாம் ஆண்டில், பிசிக்கல் ப்ராடக்ட் டிசைன், டிஜிட்டல் ப்ராடக்ட் டிசைன், விஷுவல் டிசைன் உட்பட 5 பிரிவுகளில் இருந்து மாணவர்கள் தங்களுக்கான பாடப்பிரிவை தேர்வு செய்யலாம். சர்வதேச தரத்திலான உயர்கல்வி என்பதால் சற்று செலவு பிடிக்கும் என்றாலும், படிப்பில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு பிர்லா நிறுவனம் ஸ்காலர்ஷிப் வழங்கவும் தயாராக உள்ளது.
தடுக்கி விழும் இடங்களில் எல்லாம் பொறியியல் கல்லூரிகள் நிறைந்துள்ளதால், படிப்பதை உருப்படியாகவும், சர்வதேச தரத்துடனும், எதிர்கால நன்மைக்காவும் மேற்கொள்ள விரும்புவோர் நிச்சயம் பிட்ஸ் பிலானியின், பிட்ஸ் டிசைன் ஸ்கூலுக்கும் ஒரு விண்ணப்பத்தை தட்டி விடலாம்.
புதிய ‘பிட்ஸ் டிசைன் ஸ்கூல்’ குறித்து அந்த நிறுவனமே மார்ச் 10 அன்று பிரத்யேக ஜூம் மீட் வாயிலாக விளக்க உள்ளது. மேலும் இந்த படிப்பில் சேர விரும்புவோருக்கு வழிகாட்டும் வகையிலான இன்னொரு ஜூம் மீட் மார்ச் 24 அன்று நடைபெற உள்ளது. முன்கூட்டியே பதிவு செய்வதன் வாயிலாக இவற்றில் பங்கேற்று பயன்பெறலாம்.
இவற்றுக்கான முன்பதிவுகளை மேற்கொள்ளவும், கல்லூரி மற்றும் படிப்பு குறித்து மேலதிகம் தெரிந்து கொள்வதற்கும், கீழ்கண்ட இந்த இணைப்பை சொடுக்கி கல்வி நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதளத்துக்கு செல்லலாம்.
https://www.kamadenu.in/latest-news-tamil
இதையும் வாசிக்கலாமே...
‘ஜோக்கர் இப்போ ஹீரோவானேன்...’ நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்தநாள் ஸ்பெஷல்!
மிஸ் பண்ணிடாதீங்க... இன்று 17 மாவட்டங்களில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!
டெஸ்ட் போட்டியில் இருந்து திடீரென விலகிய அஸ்வின்... ஐசிசி விதியால் சிக்கலில் இந்திய அணி!
அதிர்ச்சி வீடியோ... யானையை காரில் துரத்திய அதிமுக பிரமுகர்: ரூ.1 லட்சம் அபராதம் விதித்த வனத்துறை!
அதிமுக ஆட்சியில் அனைத்து பெண்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை - எஸ்.பி.வேலுமணி உறுதி!