பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு... ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்யும் தேதி அறிவிப்பு!

By காமதேனு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் வரும் 20ம் தேதி முதல் ஹால்டிக்கெட்களை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது.

2023-24ம் கல்வி ஆண்டில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகளுக்கான தேதிகள் குறித்த அட்டவணை இந்த கல்வியாண்டின் தொடக்கத்திலேயே வெளியிடப்பட்டது. இதை தொடர்ந்து மார்ச் 1ம் தேதி முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும், அதனைத் தொடர்ந்து 11 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள் தொடங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.

பொதுத்தேர்வு

இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறையானது பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் குறித்த விவரங்களை அறிவித்துள்ளது. அதன்படி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மார்ச் 1ம் தேதி தொடங்கவுள்ள 12ம் வகுப்பு பொது தேர்வுகளுக்கு பிப்ரவரி 20ம் தேதி முதல் ஹால் டிக்கெட்களை இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பொதுத்தேர்வு

இதற்காக அதிகாரப்பூர்வ இணையதளமான https://dge.tn.gov.in என்ற தளத்தில் ஹால் டிக்கெட்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், யூசர் நேம், பாஸ்வேர்டு கொடுத்து ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

விருப்பம்போல சாப்பிடலாம், தூங்கலாம்... வேலையும் பார்க்கலாம்; ஹைதராபாத்தில் ஜாலி ஆபீஸ்!

பிரதமர் மோடியை பதவி விலக வேண்டும்... பகீர் கிளப்பும் சுப்பிரமணியன் சுவாமி!

வித்தவுட்டில் பயணம்... ரூ.100 கோடி அபராதம் தீட்டிய மும்பை ரயில்வே கோட்டம்!

லிவிங் டு கெதரில் மாணவி... கல்லூரி விடுதியில் குழந்தையைப் பெற்றதால் அதிர்ச்சி!

கேன்சர் நோயாளியை கொன்ற ‘எந்திரன்’; அறுவை சிகிச்சையில் நேரிட்ட விபரீதம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE