சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் நாளை தொடக்கம்... நீரிழிவு நோய் மாணவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

By காமதேனு

சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் நாளை(பிப்.15) தொடங்கி நடைபெற உள்ளன. இது தொடர்பாக சிபிஎஸ்இ முக்கிய வழிகாட்டுதல்கள் பலவற்றையும் வெளியிட்டுள்ளது.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் ஒரு சேர நாளை தொடங்கி நடைபெற உள்ளன. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 13-ம் தேதி முடிவடையும்; 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 2 அன்று முடிவடைகின்றன. 10-ம் வகுப்புக்கான முதல் நாள் தேர்வுத் தாளாக ஓவியம் உள்ளிட்டவையும், 12-ம் வகுப்புக்கு முதல் தேர்வாக தொழில்முனைவு உள்ளிட்டவையும் இடம்பெறுகின்றன.

சிபிஎஸ்இ மாணவர்கள்

சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் காலை 10.30 மணிக்கு தொடங்கும் என்றும் மாணவர்கள் காலை 10 மணிக்கு தேர்வு அறைக்குள் செல்ல வேண்டும் என்றும் தேர்வு வாரியம் அறிவுறுத்தியுள்ளது. அதிலும் முதல்நாள் என்பதால் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு குறைந்தது 15 நிமிடங்களுக்கு முன்னதாக வந்துவிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொது விதிகளைப் பொறுத்தவரை, அனைத்து மாணவ மாணவியரும் பள்ளி சீருடைகளை அணிய வேண்டும் என்றும், சிபிஎஸ்இ வாரியத்தால் அனுமதிக்கப்படாத எதையும் தேர்வறைக்கு எடுத்துச் செல்லக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒளிபுகக்கூடிய பிளாஸ்டிக் பவுச், அடையாள அட்டை, பேனா, பென்சில் உள்ளிட்டவற்றை மட்டுமே தேர்வறைக்கு எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகிறது. ஸ்மார்ட் வாட்ச் அல்லது கால்குலேட்டரை உள்ளடக்கிய வாட்ச் போன்றவை முற்றிலுமாக தடைசெய்யப்பட்டுள்ளன. தேர்வு மையங்களில் மாணவர்களுக்கு குடிநீர் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ மாணவிகள்

டைப்-1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், அத்தியாவசியமான ஒரு சில பொருட்களை வெளிப்படையான பை அல்லது பாக்ஸில் வைத்து தேர்வறைக்கு எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். இதில் சர்க்கரை மாத்திரைகள், சாக்லேட், பழங்கள், சான்ட்விச், மருத்துவர் பரிந்துரையின் கீழான மருந்துகள், 500 மிலி தண்ணீர் பாட்டில், குளுக்கோமீட்டர் மற்றும் அதற்கான பரிசோதனை பட்டை உள்ளிட்டவற்றில் தங்களுக்கு தேவையானவற்றை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.

இதையும் வாசிக்கலாமே...

'ஒரே நாடு ஒரே தேர்தல்' கூட்டாட்சிக்கு எதிரானது... சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தீர்மானம்!

இரட்டை குழந்தைகள், மனைவி கொலை... வெறிபிடித்த கணவன் எடுத்த விபரீத முடிவு!

#AK63 : நண்பர் மறைவால் அஜித் எடுத்த முடிவு... ரசிகர்கள் அப்செட்!

காதலர் தினம்... தாலியுடன் வந்த இந்து அமைப்பினர்... தெறித்து ஓடிய காதல் ஜோடிகள்!

காதலர் தின ஸ்பெஷல்... மகன்களுக்கு முத்தமிட்டு கொஞ்சிய நயன்தாரா!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE