'தாலியைக் கழற்று...' தேர்வு அறை கெடுபிடியால் திருமணமான பெண்கள் அதிர்ச்சி!

By காமதேனு

கர்நாடக மாநிலத்தில் குடிமைத் தேர்வு எழுதச் சென்ற திருமணமான பெண் தேர்வர்களின் தாலி, மெட்டி உள்ளிட்டவற்றை கழற்ற தேர்வறை கண்காணிப்பாளர்கள் கட்டாயப்படுத்தியதாக புகார் எழுந்திருக்கிறது.

மாநில சிவில் சர்வீஸ் தேர்வுகள் நேற்று கர்நாடக மாநிலத்தில் நடைபெற்றன. தேர்வு எழுதச் சென்ற திருமணமான இந்து சமூகத்தை சேர்ந்த பெண்கள், கடும் கசப்பான அனுபவங்களை சந்தித்ததாக மாநில பாஜக குற்றம்சாட்டி உள்ளது. தேர்வறை கட்டுப்பாடுகளின் பெயரில் திருமணமான இந்து பெண்களின் தாலி, கருகமணி, மெட்டி உள்ளிட்டவற்றை அகற்றுமாறு நிர்பந்திக்கப்பட்டதாக இந்த புகார் நீள்கிறது.

தேர்வு

இது குறித்து காங்கிரஸ் ஆட்சியிலான மாநில அரசின் மீது எதிர்க்கட்சி எம்எல்ஏவான பசங்கவுடா யத்னால் கேள்வி எழுப்பி உள்ளார். ”ஹிஜாப் அணிந்து இஸ்லாமிய பெண்கள் தேர்வறைக்குள் அனுமதிக்கப்பட்டபோது, இந்து பெண்களின் தாலியை அகற்ற கட்டாயப்படுத்தியது ஏன்?” என இந்து - முஸ்லிம் சாடலாக கேள்வி எழுப்பி உள்ளார்.

தேர்வு எழுதிய பெண்களில் சிலர், ”அவரவர் அவசியத்தின் பொருட்டு ஹிஜாப் உள்ளிட்டவற்றை அணிந்து சென்றவர்களை முறையான சோதனையின் பின்னர் தேர்வறையில் அனுமதித்தார்கள். ஆனால், சில பெண்கள் சிறிய ரக ப்ளூடூத் சாதனங்களை ஆபரண் செயினில் இணைத்து எடுத்துச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, மற்ற பெண்களிடம் தேர்வு அதிகாரிகள் கடுமை காட்டினார்கள். ஹிஜாப் பெண்களை சோதித்து அனுப்பியது போல, இந்து பெண்களையும் சோதித்து அனுப்பி இருக்கலாம்” என்று தெரிவித்துள்ளனர்.

இஸ்லாம் - இந்து சர்ச்சை

நீட் நுழைவுத்தேர்வின்போது தேர்வெழுதச் சென்ற பெண் தேர்வர்கள், உள்ளாடை அகற்றம் உட்பட கடும் கட்டுப்பாடுகளுக்கு ஆளானார்கள். இந்த சர்ச்சையின் வரிசையில் தற்போது கர்நாடக மாநில சிவில் சர்வீஸ் தேர்வில், தாலியை அகற்ற வைத்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

HBD AMBIKA| ‘முதல் மரியாதை’ மீது அம்பிகாவுக்கு வந்த பொறாமை!

தீபாவளி கொண்டாட்டம்... 16,895 பேருந்துகள் இயக்கம்... எந்தெந்த ஊர்களுக்கு எங்கிருந்து? முழு விபரம்!

அதிர்ச்சி... பெண் அதிகாரி கழுத்தறுத்து கொலை! மர்ம கும்பல் வெறிச்செயல்

பிரபல ரவுடி வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு! உயிர் தப்பிய குடும்பம்

அமைச்சர்எ.வ.வேலுவீட்டில் 4வதுநாளாகதொடரும்ஐடிரெய்டு!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE