ஜேஇஇ தேர்வு முடிவுகள் - நெல்லை மாணவர் முகுந்த் பிரதீஷ் அகில இந்திய அளவில் முதலிடம்!

By காமதேனு

மத்திய அரசின் பொறியியல் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு நடத்தப்படும் தகுதித்தேர்வான ஜேஇஇ நுழைவுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இந்த தேர்வில் நெல்லை மாணவர் முகுந்த் பிரதீஷ் அகில இந்திய தரவரிசை பட்டியலில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

மத்திய அரசின் பொறியியல் உயர்கல்வி கல்வி நிறுவனங்களான ஐஐடி, என்ஐடி, ஐஐஐடி மற்றும் பல தனியார் பல்கலைக்கழகங்களில் பொறியியல் படிப்புகளில் சேர ஜேஇஇ எனப்படும் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த நுழைவுத் தேர்வின் முடிவுகள் இன்று வெளியாகின. தேசிய முகமை தேர்வு நிறுவனம் நடத்திய ஜேஇஇ முதன்மை தேர்வில் நெல்லை மாணவர் முகுந்த் பிரதீஷ் அகில இந்திய தரவரிசை பட்டியலில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

முகுந்த் பிரதீஷ் உடன் ஆசிரியர்கள்

பொறியியல் படிப்பிற்கான நுழைவு தேர்வு 2 கட்டங்களாக நடைபெறுகிறது. ஜேஇஇ மெயின் (முதல்நிலை), அட்வான்ஸ்டு (முதன்மைத் தேர்வு) என 2 பிரிவுகளாக இந்த தேர்வுகள் நடத்தப்படுகிறது ஜேஇஇ மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் என்ஐடி, ஐஐஐடி கல்வி நிறுவனங்களில் சேரலாம். அட்வான்ஸ்டு தேர்வில் தேர்ச்சி பெற்றால் ஐஐடி கல்லூரிகளில் சேரலாம்.

இந்த ஆண்டு ஜேஇஇ முதன்மைத் தேர்வு கடந்த ஜனவரி 24, 27, 29, 30, 31 மற்றும் பிப்ரவரி 1, ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதற்காக பதிவு செய்த 12,21,615 பேரில் 11,70,036 பேர் தேர்வெழுதினர். இந்தநிலையில் முதன்மைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் இம்முறை மொத்தம் 23 மாணவர்கள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுளனர்.

முகுந்த் பிரதீஷ்

இந்த நிலையில் ஜேஇஇ முதன்மை தேர்வில் பாளையங்கோட்டை புஸ்பலதா வித்யா மந்திர் மாணவர் முகுந்த் பிரதீஷ் அகில இந்திய தரவரிசை பட்டியலில் (300/300) மதிப்பெண் எடுத்து முதலிடம் பெற்றுள்ளார். முதலிடத்தில் உள்ள 23 மாணவர்களில் இவர் ஒருவரே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். இவரது தந்தை ஸ்ரீகாந்த் தூத்துக்குடி அகில இந்திய வானொலி நிலையத்தில் பொறியாளராகவும், அம்மா தபால் துறையில் உதவியாளராக இருந்து விருப்ப பணி ஓய்வு பெற்றுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

6 மாதங்களுக்கான உணவுப்பொருள், டீசல் உடன் குவியும் விவசாயிகள்; தேர்தல் நெருக்கத்தில் கோரிக்கைகள் ஈடேறுமா?

சாந்தனை இலங்கைக்கு அனுப்ப ஒரு வாரத்தில் உத்தரவு பிறப்பிக்கப்படும்... உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி!

சர்வாதிகார மோடி அரசு விவசாயிகளின் குரல்களை நசுக்க முயற்சிக்கிறது: கார்கே விளாசல்!

வெற்றி துரைசாமியின் இறுதிச்சடங்கு... நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் அஜித்!

பிரசவம் நடந்த 2வது நாளில் தேர்வு... 23 வயதில் நீதிபதியான மலைவாழ் பெண்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE