இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு விண்ணப்பப்பதிவு தொடங்கியது.
நாடு முழுவதும் மருத்துவ படிப்பில் சேர மாணவர்களுக்கு நீட் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கையும் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் தமிழகம் மட்டும் இப்போது வரை நீட் தேர்வு வேண்டாம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, நீண்ட போராட்டம் நடத்தி வருகிறது.
சட்டப்போராட்டங்கள் ஒருபுறம் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், நீட் தேர்வுகள் மறுபுறம் நடத்தப்பட்டு வருகிறது. 2017 முதல் ஒவ்வொரு ஆண்டும் தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. கடந்த சில ஆண்டுகளாகத் தமிழகத்தில் இருந்து 1 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் தேர்வு எழுதி வருகின்றனர்.
இதற்கிடையே இந்த ஆண்டிற்கான நீட் தேர்வு வரும் மே மாதம் 5ம் தேதி நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது. இந்நிலையில், இந்த ஆண்டிற்கான எம்.பி.பி.எஸ்., பி.டி,எஸ்., உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு விண்ணப்பப்பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளது. மார்ச் 9ம் தேதி நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி nta.ac.exams, nta.ac.in.neet ஆகிய இணையதளம் வழியாக மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களும், கடந்த ஆண்டு நீட் தேர்ச்சி பெறாத மாணவர்களும் விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
அடேயப்பா... தேர்தல் விளம்பரத்திற்கு ஒரே வருடத்தில் ரூ.432 கோடி செலவழித்த பாஜக!
ஆபரேஷன் தியேட்டரில் ப்ரீ-வெட்டிங் ஷூட்... அரசு மருத்துவர் டிஸ்மிஸ்!
ஹரிஹரனின் இசைக் கச்சேரியில் குளறுபடி... கூட்ட நெரிசலில் சிக்கி பலர் காயம்!
நடிகர் மிதுன் சக்கரவர்த்தி மருத்துவமனையில் அனுமதி!
அட கொடுமையே... மருத்துவமனையில் நோயாளிகள் முன்பாக நடனமாடி ‘ரீல்ஸ்’ வெளியிட்ட மாணவர்கள்!