பிளஸ் 2 மாணவர்களுக்கு குட்நியூஸ்: பள்ளிக்கல்வித் துறை அதிரடி அறிவிப்பு!

By காமதேனு

தொழிற் பயிற்சி பெறும் பிளஸ் 2 மாணவர்களுக்கு ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவில் பயிலும் பிளஸ் 2 மாணவர்களுக்கு 10 நாட்கள் அகப்பயிற்சி (இன்டர்ன்ஷிப்) வழங்கப்பட உள்ளது.

இந்த பயிற்சிகளை நிறைவு செய்யும் ஒவ்வொரு மாணவருக்கும் ரூ.1,000 ஊக்கத் தொகை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே, அகப்பயிற்சி மேற்கொள்ளும் பிளஸ் 2 மாணவர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை பள்ளி தலைமையாசிரியர்கள் பெற வேண்டும். மாணவர்களின் வங்கிக் கணக்கு விவரம் மற்றும் அகப்பயிற்சிக்கு சென்ற தொழிற் நிறுவனங்கள் வழங்கிய சான்றிதழ்கள் உட்பட விவரங்களை www.tnemis.tn.schools.gov.in இணையதளத்தில் பள்ளிகள் பதிவேற்றம் செய்ய வேண்டும். அந்த விவரங்கள வட்டார வளமைய மேற்பார்வையாளர்களால் சரிபார்க்கப்பட்டு, அதன்பின் நிதியானது விடுவிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


தொடக்கக் கல்வித்துறையில் 1768 காலிப்பணியிடங்கள்...பிப்.14 முதல் விண்ணப்பிக்கலாம்!

அதிகாலையில் அதிர்ச்சி... சுற்றுலா பேருந்து மீது லாரி மோதி 8 பேர் பலி!

கதறும் பயணிகள்... கிளாம்பாக்கத்தில் நடுரோட்டில் அமர்ந்து பொதுமக்கள் விடியவிடிய போராட்டம்!

தமிழ்நாட்டில் 27 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை!

அரபிக்குத்து பாட்டுக்கு பெல்லி டான்ஸில் தெறிக்க விட்ட கீர்த்தி ஷெட்டி... வைரலாகும் வீடியோ!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE