பிஆர்க் மாணவர் சேர்க்கை: ஆக.26-க்குள் கல்லூரியில் சேர உத்தரவு

By KU BUREAU

சென்னை: பி.ஆர்க். எனப்படும் இளநிலை கட்டிடக்கலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கையில் அரசு ஒதுக்கீட்டு இடங்களை நிரப்புவதற்கான இணையவழி கலந்தாய்வு கடந்த 19-ம் தேதி தொடங்கியது. இதில் பொதுப்பிரிவில் 1,449 மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களில்1,120 பேர் கல்லூரியை தேர்வுசெய்தனர். அதில் 881 பேருக்குதற்காலிக ஒதுக்கீடு அளிக்கப் பட்டு அதை உறுதிசெய்ய 21-ம்தேதி இரவு 7 மணிவரை அவ காசம் அளிக்கப்பட்டது.

அதேபோல், அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கான 7.5சதவீத உள்ஒதுக்கீட்டு இடங்களில் தகுதிபெற்ற 104 பேரில் 75 பேர்கல்லூரியை தேர்வு செய்தனர். அவர்களில் 70 பேருக்கு தற்காலிக ஒதுக்கீடு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், பொதுப்பிரி வில் 275 பேர், 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டு பிரிவில் 41 பேர் என மொத்தம் 316 பேர் தற்காலிக ஒதுக்கீட்டை உறுதிபடுத்திய நிலையில், அவர்களுக்கு நேற்று கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை ஆன்லைனில்வழங்கப்பட்டது. அவர்கள் ஆக. 26-ம் தேதிக்குள் ஒதுக்கீடு பெற்ற கல்லூரியில் சேர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE