சென்னை ஐஐடி புதிய சாதனை... விளையாட்டு இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவரை சேர்க்கும் முதல் ஐஐடி!

By காமதேனு

விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீட்டினை அமல்படுத்தும் முதல் ஐஐடி கல்வி நிறுவனமாக, சென்னை ஐஐடி சாதனை படைக்க உள்ளது.

சென்னையில் அமைந்துள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம்(ஐஐடி), அதன் இளநிலை(யுஜி) சேர்க்கையில் விளையாட்டு இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தும் முதல் ஐஐடி என்ற சாதனையை படைக்க இருக்கிறது. 2024-25 கல்வியாண்டில் இருந்து ஒவ்வொரு துறையிலும் தலா 2 இடங்களை ஸ்போர்ட்ஸ் கோட்டாவுக்கு ஒதுக்க முடிவு செய்துள்ளது. இது தொடர்பான விவரங்களை சென்னை ஐஐடி இயக்குனர் வி காமகோடி தெரிவித்துள்ளார்.

சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி

தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் உள்ள ​​ஐஐடி கல்வி நிறுவனங்களில் விளையாட்டுக்கான இடஒதுக்கீடு அமலில் இல்லை. அதே வேளை ஐஐடிக்கு இணையான பல இந்திய உயர்கல்வி நிலையங்கள் விளையாட்டுக்கான இட ஒதுக்கீட்டு முறையை பாவித்து வருகின்றன. இந்த வரிசையில், "வரும் கல்வியாண்டு முதல் விளையாட்டு ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்திய முதல் ஐஐடியாக பெருமை கொள்ள இருக்கிறோம். தாங்கள் விரும்பும் விளையாட்டுகளில் ஜொலிக்கும் மாணவர்களை சென்னை ஐஐடி வரவேற்க தயாராக இருகிறது” என்று காமகோடி தெரிவித்தார்.

"ஒரு துறைக்கு 2 சீட்டுகள் என ஸ்போர்ட்ஸ் கோட்டா ஒதுக்கப்படும். இந்த இரண்டில் ஒன்று பாலின நடுநிலையாக இருக்கும்; அதில் ஆண் பெண் என தகுதியுடைய எவரும் சேரலாம். மற்றொன்று பெண்களுக்கு மட்டுமே என ஒதுக்கப்பட்டுள்ளது" என்றும் அவர் தெரிவித்தார்.

சென்னை ஐஐடி

இந்த ஸ்போர்ட்ஸ் கோட்டாவின் கீழ் ஐஐடி சேர்க்கைக்கு தகுதிபெற, விண்ணப்பதாரர்கள் பொதுவான தரவரிசைப் பட்டியல் அல்லது ஜெஇஇ அட்வான்ஸ்டு தரவரிசைப் பட்டியலில் ஒரு இடத்தைப் பெற்றிருக்க வேண்டும். மேலும் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான விளையாட்டுகளில் குறைந்தபட்சம் ஒரு பதக்கத்தையாவது வென்றிருக்க வேண்டும். இத்துடன் சேர்க்கைக்கான இதர தகுதிகளையும் பெற்றிருக்க வேண்டும்.

இதையும் வாசிக்கலாமே...

அதிரடி... தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை அறிவித்தார் நடிகர் விஜய்!

பேடிஎம் கணக்கில் உள்ள வாடிக்கையாளர் பணம் என்னாகும்? ரிசர்வ் வங்கி தடையை தொடர்ந்து பேடிஎம் விளக்கம்!

பிரதமரின் வருகையால் ராமேஸ்வரம் கோயிலில் எகிறிய உண்டியல் காணிக்கை - 16 நாளில் இவ்வளவா?

சோகம்... புற்றுநோயால் காலமான நடிகை பூனம் பாண்டே!

வீட்டிற்குள் விழுந்து நொறுங்கிய விமானம்... அதிர வைக்கும் வீடியோ!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE