நுழைவுத் தேர்வு அச்சம்... மேலும் ஒரு மாணவி தற்கொலை!

By காமதேனு

ராஜஸ்தான் மாநிலத்தில் நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த மாணவி ஒருவர் தேர்வு அச்சம் காரணமாக தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், கோடா நகரில் மாணவர்களை நுழைவுத் தேர்வுக்கு தயார்படுத்தும் ஏராளமான பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. ஐஐடி உள்ளிட்ட பல்வேறு தொழில் நுட்பக் கல்லூரிகளில் சேர நடத்தப்படும் ஜேஇஇ நுழைவுத் தேர்வு மற்றும் மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வு ஆகியவற்றிற்கு பயிற்சி கொடுக்க நூற்றுக்கணக்கான கோச்சிங் சென்டர்கள் இங்கு இருக்கின்றன. லட்சக்கணக்கில் பணம் பெற்றுக் கொண்டு இங்குள்ள விடுதிகளில் மாணவர்களை தங்க வைத்து மையங்கள் மாணவர்களுக்கான பயிற்சிகளை நடத்தி வருகின்றன.

இங்கு படிக்கும் மாணவர்கள் பலரும் நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றுவிட்டாலும், ஏராளமான மாணவர்கள் நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெற முடியாமல் ஓர் ஆண்டுக்கு மேலும் படித்து வருகின்றனர். அவர்களில் சிலர் தோல்வி பயம் காரணமாக தற்கொலை செய்து கொள்கின்றனர். ஏற்கெனவே பல மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட நிலையில், தற்போது நிகரிகா சிங் என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கோட்டாவை சேர்ந்த அம்மாணவி அங்குள்ள ஜேஇஇ நுழைவுத்தேர்வு பயிற்சி மையம் ஒன்றில் படித்து வந்தார். இந்த நிலையில் இன்று காலை அவர் தனது வீட்டில் தூக்கில் தொங்கினார். பதறித்துடித்த பெற்றோர் அவரை மீட்டு உடனே மருத்துவ மனையில் சேர்த்தனர். ஆனால், அதற்குள் மாணவி உயிரிழந்தார்.

தற்கொலைக்கு துணியும் முன்பாக மாணவி நிகரிகா கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அக்கடிதத்தில், ’நான் தோற்றுவிட்டேன். அம்மா, அப்பா... என்னால் ஜேஇஇ பண்ண முடியாது. நான் மோசமான மகள். என்னை மன்னித்து விடுங்கள் அப்பா. எனக்கு இருக்கும் கடைசி வாய்ப்பு இதுதான்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

வங்கி அதிகாரியின் மகளான நிகரிகா ஜேஇஇ நுழைவுத் தேர்வுக்காக தினமும் 8 மணி நேரம் வரை படித்து வந்தார். ஆனாலும் அதில் வெற்றிபெற அவரால் முடியவில்லை. இது போன்ற பயிற்சி மையங்களால் மாணவர்கள் மீது கொடுக்கப்படும் அழுத்தத்தால் அவர்கள் கடுமையான மன அழுத்ததிற்கு ஆளாகின்றனர். கடந்த ஆண்டு மட்டும் 23 மாணவர்கள் கோடாவில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்கிற அதிர்ச்சி தரும் புள்ளி விவரங்களும் இப்போது வெளியாகியுள்ளன.

இதையும் வாசிக்கலாமே...

பெரும் காலத்தின் மனசாட்சி... மகாத்மா காந்திக்கு கமல்ஹாசன் புகழாரம்!

குட்நியூஸ்... 6,244 காலிப்பணியிடங்களை நிரப்ப ஜூன் 9-ல் குரூப் 4 தேர்வு!

யாருடன் கூட்டணி?... இன்று முடிவு செய்கிறது பாமக!

'நயினார் நாகேந்திரனுக்கு எம்.பி சீட் கொடுத்தால்?'...பாஜகவை எச்சரிக்கும் போஸ்டரால் பரபரப்பு!

மறக்க மனம் கூடுதில்லையே... காதலியின் நினைவு நாளில் தற்கொலை செய்த காதலன்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE