நிலவிலிருந்து பூமிக்கு எரிபொருள் கொண்டு வரமுடியும் - மயில்சாமி அண்ணாதுரை!

By காமதேனு

நிலவில் கட்டமைப்புகளை மேம்படுத்தினால், தேவையான எரிபொருளை பூமிக்கு கொண்டு வர முடியும் என்று இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்குநா் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசினார், அதில் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் ரஷியா போன்ற நாடுகள் கூட நிலவின் தென் துருவத்தில் விண்கலத்தை தரையிறக்கி, இயக்க முடியுமா என்று கேள்வி எழுப்பினர். ஆனால், இந்தியா வெற்றிகரமாக விக்ரம் லேண்டரை பாதுகாப்பாக நிலவின் தென் துருவத்தில் இறக்கி வெற்றி கண்டதாக கூறினார்.

பூமியில் இருந்து நாம் எடுக்கும் எரிபொருளால் பல்வேறு சுற்றுசூழால் பாதிப்புகள் ஏற்படுவதாக கூறப்படும் நிலையில், நிலவிலிருந்து பூமிக்கு எரிபொருளை கொண்டு வர முடியும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. அதற்கு தேவையான கட்டமைப்புகளை உருவாக்கினாலே நாம் நமது மின்சாரத்தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்றார். அதேபோல், நிலவில் இருந்து கொண்டு செவ்வாய் கிரகத்தில் அடுத்தகட்ட ஆராய்ச்சிக்கான நடவடிக்கையை மேற்கொள்ள முடியும் என்றும் கூறினார்.

இதையும் வாசிக்கலாமே...

பிஎஸ்சி படித்தவர்களுக்கு ரூ.1,40,000 சம்பளத்தில் விமான நிலையத்தில் வேலை!

லீக்கானது ‘லியோ' படத்தின் கதை... படக்குழுவினர் அதிர்ச்சி!

பெற்றோரிடம் ரூ.2 லட்சம் பேரம்; குழந்தையை விற்க முயற்சி- அரசு மருத்துவர் பணியிடை நீக்கம்

பிரபஞ்ச அழகிப் போட்டியில் புதுமை... 2 திருநங்கைகள் பங்கேற்பு!

எனக்கு அதைத் திருடுற பழக்கம் இருக்கு... நடிகை கீர்த்தி சுரேஷ்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE