’குழந்தை திருமணம் இல்லா’ உறுதிமொழியை எடுக்க முதன்மைக் கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிகல்வித்துறை இயக்குநர் உத்தரவிட்டிருந்த நிலையில், பள்ளிகளில் மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
பள்ளிகளில் இன்று வழிபாட்டுக் கூட்டத்தின்போது, ‘குழந்தை திருமணங்கள் இல்லா’ உறுதிமொழியை எடுக்க முதன்மைக் கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிகல்வித்துறை இயக்குனர் அறிவொளி உத்தரவிட்டிருந்தார். அதன்படி இன்று மாணவர்கள், ‘’இந்த உறுதி மொழியின்போது, எனது பகுதியிலோ சமூகத்திலோ குழந்தை திருமணம் நடப்பதாக தெரியவந்தால் அதற்கு எதிராக அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன்.
எனது சுற்றுப் புறத்தில், சமூகத்தில் எந்தவொரு குழந்தைக்கும் திருமணம் நடக்காமல் இருப்பதை உறுதி செய்வேன். எங்கள் பகுதியில் குழந்தை தொழிலாளர், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை போன்ற அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுப்பேன். குழந்தைகளின் பாதுகாப்புக்காகவும், கல்விக்காகவும் செயல்படுவேன் என்று உறுதி அளிக்கிறேன்’’ என உறுதிமொழி எடுத்துக் கொண்ட மாணவர்கள் படிவங்களில் கையெழுத்திட்டனர்.