தமிழ்நாடு அரசின் குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ குடிமை பணிகளுக்கான முதல்நிலை எழுத்து தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.
தமிழ்நாடு அரசின் குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ குடிமை பணிகளுக்கான முதல்நிலை எழுத்து தேர்வு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்தது. தமிழகம் முழுவதும் 20 மாவட்டங்களில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த 186 தேர்வு மையங்களில் தேர்வுகள் நடந்தது. காலையில் தமிழ் மொழி தகுதித்தாள் தேர்வு, பிற்பகலில் எழுத்து தேர்வு நடத்தப்பட்டது.
தொகுதி-2 முதன்மை எழுத்து தேர்வு தொடர்பாக அதிக தேர்வர்களின் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் பணிகள் இருந்ததாலும், ஒரே நேரத்தில் மதிப்பீடு செய்ய வேண்டிய தேர்வுகள் மற்றும் பிற தேர்வுகள் நடத்த வேண்டிய சூழல் இருந்ததாலும் முடிவுகள் டிசம்பர் 2023ல் வெளியிடப்படும் என, அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி தேர்வு முடிவுகள் டிசம்பர் 16ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டும், தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. இந்நிலையில் குரூப் 2, 2 ஏ தேர்வு முடிவுகள் ஜனவரி 12ம் தேதி வெளியிடப்படும் என்று மீண்டும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் ஒருநாள் முன்னதாக இன்று குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. தேர்வு முடிவை தெரிந்து கொள்ள விரும்பும் தேர்வர்கள் https://www.tnpsc.gov.in/ என்ற பக்கத்தில் பதிவு எண் மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றை பதிவிட்டு அறிந்துகொள்ளலாம் என, டிஎன்பிஎஸ்சி தெரிவித்து உள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
நடிகர் விஜயகாந்த் நினைவிடத்தில் கதறியழுத நடிகை ராதா!
மொத்தமும் போச்சு... ஓ.பீ.எஸ். மேல்முறையீட்டு வழக்கில் பரபரப்பு தீர்ப்பு: அதிமுகவினர் குஷி!
பகீர்... நடுரோட்டில் தலைமைக் காவலருக்கு அரிவாள் வெட்டு!
லெஸ்பியன் ஜோடிக்கு கோயிலில் நடந்த திருமணம்!
இனி பி.எட் படிப்புகளுக்கு தடை; மத்திய கல்வி அமைச்சகம் அதிரடி!