குட்நியூஸ்... அரசு விடுதி மாணவர்களுக்கு உதவித்தொகை உயர்வு... முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

By காமதேனு

அரசுப் பள்ளி, கல்லூரி விடுதி மாணவர்களுக்கான உணவு உதவித் தொகையை உயர்த்தி வழங்க தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அரசு மாணவர் விடுதி

தமிழகத்தில், ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்காக விடுதிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசு சார்பில் மாதந்தோறும் கல்லுாரி மாணவர்களுக்கு தலா ரூ.1,100, பள்ளி மாணவர்களுக்கு தலா ரூ.1000 வீதம் உணவு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிதியை வைத்து தான், விடுதி காப்பாளர்கள் மாணவர்களுக்கான உணவுப் பொருட்களை வாங்கி வருகின்றனர். இந்த நிலையில், அரசுப் பள்ளி விடுதி மாணவர்களுக்கான உணவு உதவித் தொகை 1000 ரூபாயிலிருந்து 1400 ரூபாயாகவும், அரசு கல்லூரி விடுதி மாணவர்களுக்கான உணவு உதவித் தொகை 1100 ரூபாயிலிருந்து 1500 ரூபாயாகவும் உயர்த்தி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!

இன்று கோலாகலமாக தொடங்குகிறது உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா!

கார் ஓட்டக் கற்றுக்கொடுத்த மகன்; கிணற்றில் பாய்ந்து தந்தை உயிரிழப்பு!

செல்போன் விளையாட்டால் விபரீதம்; மனநலம் பாதிக்கப்பட்ட 17 வயது சிறுவன்

பெரும் சோகம்... மாயமான 23 ராணுவ வீரர்கள்! தேடுதல் வேட்டை தீவிரம்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE