புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் 5.33 லட்சம் பேருக்கு அடிப்படை கல்வி: பள்ளிக் கல்வித் துறை நிதி ரூ.2.90 கோடி விடுவிப்பு

By KU BUREAU

சென்னை: நாடு முழுவதும் கல்வி கற்காத15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தன்னார்வலர்களை கொண்டு அடிப்படை எழுத்தறிவு பயிற்றுவிப்பதற்காக மத்திய அரசால் ‘புதிய பாரத எழுத்தறிவுத்‌ திட்டம்‌’ 2022-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

தமிழகத்தில் பள்ளிசாராமற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநரகத்தின் மூலம் இந்த திட்டத்தின் கீழ்கடந்த 2 ஆண்டுகளில் 10 லட்சம்பேருக்கு அடிப்படை எழுத்தறிவு கல்வி வழங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து 2024-25-ம் கல்வியாண்டில் தமிழகத்தில் எழுதப் படிக்க தெரியாத 5 லட்சத்து 33,100 பேருக்கு அடிப்படை எழுத்தறிவுக் கல்வியை வழங்கும் வகையில் இந்த திட்டம் 2 கட்டங்களாக செயல்படுத்தப்பட உள்ளது. முதல்கட்டமாக கடந்த ஜூலை 15-ம்தேதி முதல் தமிழகம் முழுவதும்கற்போர் மையங்கள் அமைக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக 50 சதவீத முதல்தவணை நிதியாக ரூ.2 கோடியே 90 லட்சத்து 43,302 நிதியானது மாநில அரசால் பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநரகத்துக்கு தற்போது விடுவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிதிக்குரிய செலவின வரையறை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி அந்தந்த தலைப்புகளுக்குரிய நிதி ஒதுக்கீடு, செயல்பாடுகளின் அடிப்படையில் திட்ட விதிகளைப் பின்பற்றி ஆகஸ்ட் 30-ம் தேதிக்குள் செலவினங்களை மேற்கொள்ள வேண்டும்.

அந்த செலவினங்களுக்கான பயன்பாட்டுச்சான்றிதழில் மாவட்ட முதன்மைகல்வி அலுவலர்கள் கையொப்பமிட்டு இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். இதுசார்ந்து அனைத்து மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும், பள்ளிசாரா மற்றும்வயது வந்தோர் கல்வித் துறைஇயக்குநரகம் சார்பில் சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தப் பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE