குருப்-2 தேர்வுக்கு இலவச பயிற்சி

By KU BUREAU

சென்னை: சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: குருப்-2 தேர்வு மூலம் 507காலிப்பணியிடங்களும், குருப்-2ஏ தேர்வு வாயிலாக 1820 காலிப்பணியிடங்களும் நிரப்பப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி பட்டப்படிப்புஆகும். ஒருங்கிணைந்த குருப்-2மற்றும் குருப்-2 ஏ முதல்நிலைத்தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது.

இதற்கான பயிற்சி வகுப்பு கிண்டியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் ஜூலை 18-ம் தேதிதொடங்குகிறது. வாரத்தில் திங்கள்முதல் வெள்ளிக்கிழமை வரை வகுப்புகள் நடைபெறும்.

இந்த இலவச பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் பட்டதாரிகள் குருப்-2 முதல்நிலைத் தேர்வு விண்ணப்ப நகல், ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படம் ஆகியவற்றுடன் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும்மையத்தை அலுவலக வேலைநாட்களில் நேரடியாக அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். சென்னை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இந்தபயிற்சி வகுப்பில் சேர்ந்துபயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE