மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான வருகைப்பதிவை நாளை முதல் செயலியின் மூலம் பதிவு செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது
நாளை முதல் மாணவர்களின் வருகையை அந்தந்த வகுப்பு ஆசிரியர்கள் கணக்கிட்டு செல்போன் மூலம் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு தினமும் அனுப்பி வைக்க வேண்டும். அதேபோல, ஆசிரியர்களும் தங்கள் வருகைப் பதிவை தினமும் பள்ளிக் கல்வித்துறையின் இணைய தளமான இஎம்ஐஎஸ்-ல் உள்ள பிரத்யேக செயலி மூலம் தினமும் பதிவு செய்ய வேண்டும்.
அதேபோல, பணியின்போது எடுக்கும் விடுப்பு, தற்செயல் விடுப்பு, மருத்துவ விடுப்பு போன்றவற்றையும் செயலி வழியாகவே ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. செயலி வருகைப்பதிவு நடைமுறை குறித்து இந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட நிலையில் நாளை (ஆகஸ்ட் 1) முதல் இது அமலுக்கு வருகிறது.