இளைஞர்களால் தான் மாற்றத்தை உருவாக்க முடியும்: வெங்கய்யா நாயுடு

By ஆர்.டி.சிவசங்கர்

"ஒரு நாட்டின் ‌இளைஞர்களால் ‌தான்‌ அதன்‌ வளர்ச்சியில் ‌மாற்றத்தை ஏற்படுத்த முடியும்‌" என்று குடியரசு துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடு கூறினார்.

நீலகிரி மாவட்டம் உதகை லவ்டேலில் உள்ள பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் குடியரசு துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடு இன்று பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், “ ஒரு நாட்டின் ‌இளைஞர்களால் ‌தான்‌ அதன்‌ வளர்ச்சியில் ‌மாற்றத்தை ஏற்படுத்த முடியும்‌. இந்தியா உலகின் ‌முன்னணி நாடாக உருவெடுக்கும் ‌வாசலில்‌ நிற்கிறது. உங்கள் ‌எதிர்காலமும்‌ நமது தேசத்தின் ‌எதிர்காலமும்‌ ஒன்றோடொன்று பின்னிப்‌ பிணைந்துள்ளது” என்று கூறினார்.

மேலும், “தொழில்நுட்ப வளர்ச்சியுடன்‌, உண்மையில்‌ தேசிய வாழ்வின்‌ அனைத்துத்துறைகளிலும்‌, அடுத்த தலைமுறையாக, நாம்‌ இதுவரை அடைந்துள்ள முன்னேற்றம் ‌நீடிக்காமல்‌, இந்தியாவைப்‌பற்றி உலகமே பேசும்‌ அளவுக்கு, புதிய உச்சத்துக்கு எடுத்துச்‌செல்வதை உறுதி செய்வது உங்கள்‌பொறுப்பாகும்” என்று அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், நீலகிரி மாவட்ட ஆட்சியர் எஸ்‌.பி.அம்ரித், பள்ளி ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள் ராஜேஷ்‌சந்திரா, டாக்டர்‌ சரஸ்வதி, தலைமையாசிரியர்‌ பிரபாகரன்‌, ஊழியர்கள் ‌மற்றும் ‌மாணவர்கள்‌ பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE