காமராஜர் பிறந்தநாளில் மாணவிகளுக்கு கிடைக்கப் போகிறது 1000 ரூபாய்!

By காமதேனு

அரசு பள்ளிகளில் படித்து கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம், காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15-ம் தேதி அமலுக்கு வரும் என உயர்கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து, கலை அறிவியல், பொறியியல், வேளாண், கால்நடை உள்ளிட்ட உயர்கல்வி படித்து வரும் மாணவிகளுக்கு இத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின்படி 3 லட்சம் மாணவிகள் பயன் பெறுவார்கள் எனவும், குறிப்பாக கலை அறிவியல் படிப்புகளில் மட்டும் ஒரு லட்சம் மாணவிகள் பலன் பெற உள்ளதாக உயர்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கல்லூரி மாணவிகளுக்கு பலனளிக்கக் கூடிய இந்த திட்டம் ஜூலை 15-ம் தேதி காமராஜர் பிறந்த நாள் அன்று அமலுக்கு வர உள்ளதாகவும் மாணவிகளுடைய வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் நேரடியாக செலுத்தப்படும் என்றும் உயர்கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE