வேளாண் வர்த்தக மேலாண்மையில் எம்பிஏ படிப்பு: இக்னோ பல்கலை.யில் அறிமுகம் 

By லிஸ்பன் குமார்

சென்னை: வேளாண் வர்த்தக மேலாண்மையில் புதிய எம்பிஏ படிப்பை இக்னோ பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இக்னோ எனப்படும் இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் தொலைதூரக்கல்வி வாயிலாக பல்வேறு பாடப்பிரிவுகளில் இளங்கலை, முதுகலை, டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகளை வழங்கி வருகிறது. மத்திய அரசு பல்கலைக்கழகமான இக்னோவில் ஏற்கெனவே நிதி, மனிதவளம், விற்பனை உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் எம்பிஏ படிப்பு வழங்கப்படுகிறது.

இந்நிலையில், தற்போது இக்னோவில் வேளாண் வர்த்தக மேலாண்மையில் புதிய எம்பிஏ படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வேளாண் வணிகத்தையும், விவசாயிகளின் பொருளாதாரத்தையும் மேம்படுத்தக்கூடிய நிபுணர்களை உருவாக்கும் நோக்கில் இதற்கான பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்த எம்பிஏ படிப்பில் பட்டதாரிகள் சேரலாம். ஜூலை பருவ சேர்க்கைக்கு ஜுன் 30-ம் தேதிக்குள் ஆன்லைனில் (https://ignouadmission.samarth.edu.in/) விண்ணப்பிக்க வேண்டும்.

இப்படிப்பு தொடர்பான அனைத்து விவரங்களையும் இக்னோ பல்கலைக்கழக இணையதளத்தில் (www.ignou.ac.in) விரிவாக தெரிந்துகொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு இக்னோ சென்னை மண்டல அலுவலகத்தை 044-26618040 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் என அதன் முதுநிலை மண்டல இயக்குநர் கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE