45-வது புத்தகக் காட்சிக்கு ஆன்லைனில் டிக்கெட் பதிவு

By காமதேனு

45-வது சென்னை புத்தகக் காட்சியைப் பார்வையிட வருவோர், புத்தகங்கள் வாங்க வருவோருக்கு இணையம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் புத்தகக் காட்சிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை தற்போது தொடங்கி உள்ளது.

சென்னை புத்தகக் காட்சி, நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் ஜனவரி மாதமே நடைபெறுவதாக இருந்தது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஒத்திவைக்கப்பட்டிருந்த புத்தகக் காட்சி, வரும் 16-ம் தேதி தொடங்கி மார்ச் 6-ம் தேதிவரை 19 நாட்கள் நடைபெற உள்ளது.

கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கூட்ட நெரிசலை தவிர்க்க, புத்தகக் காட்சியில் கலந்து கொள்வோர், ஆன்லைன் முன்பதிவு செய்து அனுமதிச் சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளலாம் என தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம்(பபாசி) தெரிவித்துள்ளது.

இந்நிலையில் டிக்கெட் முன்பதிவு bapasi.com என்கிற இணையத்தில் தொடங்கப்பட்டுள்ளது. ஒரு நபருக்கு 10 ரூபாய் டிக்கெட் வீதம், 19 நாட்களுக்குப் பதிவு செய்யும் வகையில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. புத்தகக் காட்சி நடைபெறும்போது நேரில் வந்தும் அனுமதிச் சீட்டு பெற்றுக் கொள்ளலாம் என்றும் பபாசி தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE