தடுப்பூசி போட்டவர்களுக்கு புடவை பரிசு

By கரு.முத்து

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகேயுள்ள நெய்விளக்கு கிராமத்தில் இன்று (செப் 12) தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்குப் புடவையைப் பரிசாக அளித்து ஆச்சரியப்படுத்தினார் ஆசிரியை அண்டர்காடு வசந்தா.

.

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டம் நெய்விளக்கு கிராமத்தைச் சேர்ந்தவர் சமூகசேவகரும், ஆசிரியையுமான அண்டர்காடு வசந்தா சித்திரவேலு. தனது ஊரில் இன்று நடைபெறும் முகாமில் இதுவரை தடுப்பூசி போடாதவர்கள் அனைவரும் ஆர்வமுடன் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று விரும்பினார். அதற்காக அனைவரையும் வரவழைக்க என்ன செய்யலாம் என்று யோசித்தவர் தடுப்பூசி போட்டுக் கொண்டால் புடவைப் பரிசாக அளிக்கலாம் என திட்டமிட்டார்.

ஊ.ம.தலைவர், துணைத்தலைவரிடம் புடவைகளை ஒப்படைக்கும் ஆசிரியை வசந்தா

இன்று நாடெங்கும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. அதையொட்டி மக்களைத் தடுப்பூசி போடவைக்க அரசாங்கம் ஏராளமான முயற்சிகளைச் செய்துவருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் ஒருசில இடங்களில் தடுப்பூசி போட்டுக் கொள்கிறவர்களுக்கு தலா ஐந்து முட்டைகள் பரிசாக வழங்கப்பட்டது. பல இடங்களில் பரிசுத் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டன.

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டம் நெய்விளக்கு கிராமத்தைச் சேர்ந்தவர் சமூகசேவகரும், ஆசிரியையுமான அண்டர்காடு வசந்தா சித்திரவேலு. இன்று தனது ஊரில் நடைபெறும் முகாமில், இதுவரை தடுப்பூசி போடாதவர்கள் அனைவரும் ஆர்வமுடன் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று விரும்பினார். அதற்காக அனைவரையும் வரவழைக்க என்ன செய்யலாம் என்று யோசித்தவர் தடுப்பூசி போட்டுக் கொண்டால் புடவைப் பரிசாக அளிக்கலாம் என திட்டமிட்டார்.

இதையடுத்து நெய்விளக்கு ஊராட்சி மன்றத் தலைவர் கவிதா தர்மராஜனைத் தொடர்புகொண்டு தடுப்பூசி போடாதவர்கள் இன்னும் எத்தனைப்பேர் என்று கேட்டறிந்தார். 450 பேர் ஊசி போடவில்லை என்றும், இன்றைய முகாமில் எப்படியும் 350 பேராவது வருவார்கள் என்று தகவல் கிடைத்தது. அதையடுத்து உடனடியாக களத்தில் இறங்கிய வசந்தா, ரூபாய் 50, 000 மதிப்பில் 350 புடவைகளை வாங்கிவந்து ஊராட்சிமன்ற தலைவரிடம் முதல்நாள் இரவே ஒப்படைத்தார்.

நெய்விளக்கு ஊராட்சி முழுவதும் இன்று தடுப்பூசி போட்டுக் கொண்டால் புடவை பரிசு என்ற தகவல் சென்று சேர்ந்தது. அதையடுத்து இன்று தடுப்பூசி போடாத அக்கிராம மக்கள் பலரும் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். ஊராட்சி மன்ற தலைவர் கவிதா தர்மலிங்கம் புடவை வாங்கிக்கொடுத்த வசந்தாவை அழைத்து முகாமை தொடங்கி வைக்கச் செய்தார். முகாமை தொடங்கிவைத்த வசந்தா, அப்போது தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்குப் புடவை பரிசாக வழங்கினார்.

மாணவர்களுக்கு மழைக்காலத்தில் குடைகள், கரோனா பொது முடக்கக் காலத்தில் மாணவர்களின் வீடுகளுக்கே சென்று நிவாரணப்பொருட்கள் வழங்கியது, சாலையோர மக்களுக்கு உணவு, உடை வழங்கியது, தினம்தோறும் கபசுரக்குடிநீர் வழங்கியது என ஏராளமான உதவிகளைச் செய்துவரும் ஆசிரியை வசந்தா சித்திரவேலு, கரோனாவுக்கு எதிரான போரில் தன்னை தொடர்ந்து ஈடுபடுத்திக் கொண்டிருப்பது வாழ்த்துதலுக்குரியது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE