ஒருங்கிணைந்த பிஎட் சேர்க்கையை 30-க்குள் முடிக்க உத்தரவு

By KU BUREAU

சென்னை: தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பதிவாளர்(பொறுப்பு) நா.ராமகிருஷ்ணன், அனைத்து கல்வியியல் கல்லூரிகளின் முதல்வர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் இணைப்பு அங்கீகாரம் பெற்றுஇயங்கும் கல்வியியல் கல்லூரிகளில், 2024-25 கல்வி ஆண்டுக்கான 4 ஆண்டு கால பிஎஸ்சி. பிஎட் மற்றும் பிஏ பிஎட் (ஒருங்கிணைந்த பிஎட் படிப்பு) மாணவர் சேர்க்கையை ஜூன் 1-ம் தேதி தொடங்கி 30-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.

முதலாம் ஆண்டுக்கான வகுப்புகள், ஜூலை 3-ம் தேதி தொடங்கப்பட வேண்டும். மாணவர் சேர்க்கை விவரங்கள் ஜூலை 17 முதல் 20-ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். மாணவர்களின் சான்றிதழ்கள் ஜூலை 24 மற்றும் 25-ம் தேதி சரிபார்க்கப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE