சிறுமியை திருமணம் செய்த இளைஞர் கைது @ நாங்குநேரி

By KU BUREAU

திருநெல்வேலி ஏர்வாடி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமியின் தந்தை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்நிலையில், அவரது தாயாருக்கும் உடல்நலம் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் அந்த சிறுமிக்கு திருமணம் செய்து வைக்க அவரது உறவினர்கள் முடிவு செய்துள்ளனர்.

களக்காடு பகுதியைச் சேர்ந்த உறவினரான தளவாய் என்பவரது மகன் வினித் ராஜா (26) என்பவருடன் சமீபத்தில் சிறுமிக்கு திருமணம் நடந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகள், நாங்குநேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீஸார் விசாரணை நடத்தி வினித் ராஜா மற்றும் சிறுமியின் தாயார் மீது வழக்குப் பதிவு செய்தனர். இதில் வினித் ராஜாவை போலீஸார் கைது செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE