மனநலம் குன்றிய பெண் குழந்தை விஷம் கொடுத்து கொலை: காரைக்குடி தம்பதி தற்கொலை முயற்சி

By KU BUREAU

காரைக்குடி: காரைக்குடியில் மனநலம் பாதித்த பெண் குழந்தையை பராமரிக்க முடியாததால், அதற்கு விஷம் கொடுத்து, தம்பதி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

காரைக்குடி அண்ணாநகர் என்.எஸ்.கே.தெருவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் லிங்கம் (37). இவரது மனைவி பானுமதி (33). இவர்களது குழந்தை விஷாலினி (9). மனநலம் பாதித்த மாற்றுதிறனாளியான அக்குழந்தையை பராமரிப்பதில் இருவரும் சிரமப்பட்டு வந்தனர். மேலும் அக்குழந்தை வயதுக்கு வந்தால் (பூப்பெய்தினால்) தொடர்ந்து பராமரிப்பதில் சிரமம் ஏற்படும் என கருதி இருவரும் மனஉளைச்சலில் இருந்து வந்தனர்.

இந்த நிலையில் இன்று (சனிக்கிழமை) குழந்தைக்கு விஷம் கொடுத்துவிட்டு, லிங்கம், பானுமதி தம்பதியும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். உயிருக்கு போராடிய மூவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு, போலீஸார் உதவியோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இதில் சிகிச்சை பலனின்றி குழந்தை விஷாலினி உயிரிழந்தது. தம்பதி இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து காரைக்குடி வடக்கு போலீஸார் விசாரித்து வருகின்றனர். காரைக்குடியில் மனநலம் பாதித்த குழந்தைக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு, தம்பதி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

தற்கொலை தீர்வல்ல: தற்கொலை எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது. தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE