குன்றக்குடி, பிள்ளையார்பட்டி கோயில் திருவிழாக்களில் தொடர் திருட்டு - பெண் கைது: 28 பவுன் மீட்பு

By KU BUREAU

சிவகங்கை: கோயில் திருவிழாக்களில் தொடர்ந்து பெண்களிடம் சங்கிலி பறித்த பெண்ணை போலீஸார் கைது செய்து 28 பவுன் நகையைப் பறிமுதல் செய்தனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே குன்றக்குடி, பிள்ளையார் பட்டி, கோட்டையூர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற கோயில் திருவிழாக்களில் பெண்களிடம் சங்கிலி பறிக்கப்பட்டது குறித்து குன்றக்குடி போலீஸாருக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து சங்கிலி பறிப்பில் ஈடுபட்டோரை பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ்ராவத் உத்தரவின் பேரில் சார்பு-ஆய்வாளர் பழனிக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் அப்பகுதிகளில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

இதில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டது தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த முத்தழகு (36), அலமேலு (55) என்பது தெரியவந்தது. கடந்த மார்ச் 30-ம் தேதி அலமேலு சாலை விபத்தில் உயிரிழந்தநிலையில், முத்தழகை தனிப்படையினர் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 28 பவுன் நகையைப் பறிமுதல் செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE