சிவகங்கை: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கொத்தனாருக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதித்து, சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 45 வயதான கொத்தனார் ஒருவர், கடந்த 2020-ம் ஆண்டு தனது சொந்த மகளையே பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து பழையனூர் போலீஸார் வழக்குப் பதிந்து, கொத்தனாரை கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு, சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கோகுல் முருகன் குற்றம் சாட்டப்பட்ட கொத்தனாருக்கு, பாலியல் தொல்லை கொடுத்தது, பாலியல் வன்கொடுமை செய்தது உள்ளிட்ட 4 பிரிவுகளுக்கும் தனித்தனியாக வாழ்நாள் சிறையும், ரூ.4,000 அபராதமும் விதித்தார்.
மேலும், சிறுமியை மிரட்டியதற்காக 2 ஆண்டுகள் சிறையும், ரூ.100 அபராதமும் விதித்தார். தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.
» ‘சைதை துரைசாமி வேலை வெட்டி இல்லாமல் பேசுகிறார்’ - கடுமையாக விமர்சித்த கே.பி.முனுசாமி
» நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிவிப்பு - வேதாரண்யத்தில் இடும்பாவனம் கார்த்தி போட்டி!