கரூர்: குளித்தலையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில், ஏற்கெனவே 3 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 5 பேர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.
கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்த 15 வயது சிறுமி, தாய் உயிரிழந்ததையடுத்து தனது பாட்டியின் பராமரிப்பில் இருந்து வருகிறார். பள்ளி செல்லாமல் இருந்த அச்சிறுமிக்கு, இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.
இந்நிலையில், அந்த இளைஞரும், அவரது நண்பர்களும் சேர்ந்து தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குளித்தலை அனைத்து மகளிர் போலீஸார் அச்சிறுமி ஜன.27-ம் தேதி புகார் அளித்தார். இதன் பேரில் அப்போது 3 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில் மேலும் 5 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, குளித்தலை மகளிர் போலீஸார், குளித்தலையைச் சேர்ந்த கரண் (27), ரங்கநாதன் (22), சதீஷ் (20), பாலசந்தர் (20), பாலகிருஷ்ணன் (23) ஆகிய 5 பேரை நேற்று முன்தினம் போக்சோ சட்டத்தில் கைது செய்து, கரூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
» திருவாரூர் ஆட்சியரின் பெயரில் போலியான முகநூல் கணக்கு: மக்களுக்கு அறிவுறுத்தல்
» ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே நாய்களை வைத்து மான் வேட்டை: 4 பேர் கைது