திருச்சி: சமயபுரத்தை அடுத்த புறத்தாக்குடியில் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இதன் அருகிலேயே பள்ளி மாணவர்கள் விடுதி உள்ளது.
இங்கு தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள அய்யாவாடியைச் சேர்ந்த பாதிரியார் குழந்தை நாதன் (48) வார்டனாக பணியாற்றினார். இவரது நண்பர், அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் முருகன் கோட்டையைச் சேர்ந்த சுந்தர் ராஜன் (40). இவர், பாதிரியாருக்கான படிப்பை படித்து வருகிறார். இந்நிலையில், விடுதி மாணவர்களுக்கு குழந்தைநாதனும், சுந்தர் ராஜனும் பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து குழந்தைகள் நல பாதுகாப்புக் குழுவினருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் அளித்த தகவலின்பேரில் லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவுச் செய்து, 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.