கள்ளக்குறிச்சி: தியாக துருகம் வனப்பகுதியில் தைல மரங்களை வெட்டி எடுத்துச் செல்ல ஒப்பந்த அடிப்படை யில் ஒப்பந்ததாரர்கள் நியமிக்கப்பட்டு மரங்கள் வெட்டப்படுகின்றன.
இதற்காக ஒப்பந்ததாரர்களிடம் வனச்சரகர் செந்தில் குமார் லஞ்சம் கேட்பதாக கள்ளக்குறிச்சி லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார் அளிக்கப்பட்டது. லஞ்ச ஒழிப்புத் துறையினரின் அறிவுரைப்படி செயல்பட்ட வனப்பகுதி ஒப்பந்ததாரர்கள் நேற்று தியக துருகம் வனசரக அலுவலத்தில், வனச்சரகர் செந்தில்குமார் சிறு வனப்பகுதி ஒப்பந்ததாரர்களிடம் இருந்து லஞ்சப் பணமாக ரூ.3 லட்சத்து 10 ஆயிரம் பெற்றார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் அவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.