வேலூரில் அதிர்ச்சி: மதுபோதையில் தாயை அடித்து துன்புறுத்திய மகன் கைது

By KU BUREAU

வேலூர்: ஒடுக்கத்தூர் அருகே மதுபோதையில் தாயை அடித்து துன்புறுத்திய மகனை வேப்பங்குப்பம் காவல் துறையினர் கைது செய்தனர்.

வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அருகேயுள்ள சந்தைமேடு காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அலமேலு (60). கணவர் உயிரிழந்ததால் மகன் அருண் குமார் (38) என்பவருடன் வசித்து வருகிறார். அவருக்கு திருமணமாகி 2 பிள்ளைகள் உள்ளனர். அருண் குமார் மது பழக்கத்துக்கு அடிமையானதால் அவரது மனைவி பிரிந்து சென்றுவிட்டார். அருண் குமார் தினசரி மது அருந்திவிட்டு அலமேலுவை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.

வழக்கம் போல் நேற்று முன்தினம் மாலை மது போதையில் வீட்டுக்கு வந்தவர் தாய் அலமேலுவை அடித்து உதைத்துள்ளார். இந்த நிகழ்வை ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலை தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வேகமாக பரவிய நிலையில் வேப்பங்குப்பம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து அருண் குமாரை நேற்று கைது செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE