ஆம்பூர் அருகே அதிர்ச்சி: கல்லூரியின் பின்புறம் அழுகிய நிலையில் ஆண் உடல் மீட்பு

By KU BUREAU

ஆம்பூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சோலூர் கிராமத்தில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி பின்புறம் அழுகிய நிலையில் ஆண் உடல் இருப்பதாக ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்துக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் ஆம்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் குமார் தலைமையில், கிராமிய காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடேசன் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர், அழுகிய நிலையில் இருந்த ஆண் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த நபர் யார் ? எந்த ஊரைச் சேர்ந்தவர் ? என தெரியவில்லை.

இதையடுத்து, திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பிறகு, மோப்ப நாய் சாரா வரவழைக்கப்பட்டது. அந்த நாய் அங்கிருந்து சிறிது தொலைவுக்கு ஓடி அங்கிருந்து மீண்டும் திரும்பி வந்தது. தடய அறிவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தனர். இது தொடர்பாக கிராமிய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE