தாம்பரம்: நிலத் தகராறில் திமுக நிர்வாகியைகழுத்தை நெரித்து கொலை செய்து, செஞ்சியில் உடலை புதைத்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சென்னை அயனாவரத்தைச் சேர்ந்தவர் குமார்(71). சென்னை மாநகராட்சியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். திமுக பிரமுகரான இவர், தமிழ்நாடு மாநகராட்சி தொழிலாளர்கள் தொழிற்சங்க பொதுச் செயலராக இருந்தார். கிழக்கு கடற்கரை சாலை உத்தண்டியில் குமாரின் உற வினருக்குச் சொந்தமாக ஒரு கிரவுண்ட் நிலம் உள்ளது. அந்த நிலத்தின் உரிமையாளர் இறந்து விட்டார். அவரது மகன்கள்
மும்பையில் வசித்து வருகின்றனர்.
நிலம் அபகரிப்பு: இந்நிலையில் ஊரப்பாக்கம் அபிராமி நகரைச் சேர்ந்த நிலத்தரகர் ரவி(41), என்பவர் உத்தண்டி நிலத்தின் உரிமையாளர் இறந்ததை அறிந்து, அந்த நிலத்தை அபகரிக்கத் திட்டமிட்டார். அதன்படி அந்த நிலம் தன்னுடையது என்று போலி ஆவணம் தயாரித்து, நிலத்தைச் சுற்றி வேலி அமைத்ததோடு கண்காணிப்பு கேமராவையும் பொருத்தியுள்ளார்.
இச்சூழலில், மும்பையில் உள்ள உரிமையாளர்களுக்கு தங்களது நிலத்தை யாரோ அபகரிக்கும் முயற்சியில் ஈடுபடுவது தெரியவந்தது. இதுகுறித்து அவர்கள் குமாரிடம் கூறியுள்ளனர். குமார் நேரில் சென்று விசாரித்ததில் போலி ஆவணம் மூலம் நிலத்தை அபகரிக்கும் முயற்சி நடப்பது தெரியவந்தது.
இதுதொடர்பாக, கடந்த மாதம் கானாத்துார் காவல் நிலையத்தில் குமார் புகார் அளித்தார். போலீஸார் இரு தரப்பினரையும் அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது ரவி சமர்ப்பித்த ஆவணங்கள் போலி என்பது தெரியவந்தது. இதனால் கோபத்தில் இருந்த ரவி, கடந்த 16-ம் தேதி குமாருக்கு போன் செய்து, ஒரு நிலம் தொடர்பாக பேச வேண்டும். எனவே தாம்பரத்துக்கு வருமாறு அழைத்துள்ளார்.
» எண்ணெய் கசிவு விவகாரம்: சிபிசிஎல் நிறுவனத்திடம் ரூ.73 கோடி அபராதம் வசூலிக்க இடைக்கால தடை
» மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ஒரு வரி ராசிபலன் @ மார்ச் 20, 2025
கழுத்தை நெரித்து கொலை: அதை நம்பிய குமார், ஆட்டோ வில் தாம்பரம் வந்துள்ளார். அங்குகாரில் தயார் நிலையில் இருந்த ரவி, குமாரை காரில் ஏற்றிக் கொண்டு ஊரப்பாக்கம் நோக்கி சென்றுள்ளார். காரில் மேலும் இருவர் இருந்தனர். முதலில் சகஜமாகப் பேசிய ரவி, கார் வண்டலூரைத் தாண்டியதும், உத்தண்டி நில விவகாரத்தில் நீ ஏன் தலையிடுகிறாய்? என்று மிரட்டும் தொனியில் பேசியதோடு, குமாரிடம் வாக்குவாதத் திலும் ஈடுபட்டுள்ளார். பின்னர் காரில் இருந்த மற்றவர்களுடன் சேர்ந்து குமாரின் கழுத்தை கயிற்றால் இறுக்கி கொலை செய்துள்ளார். அதைத்தொடர்ந்து செஞ்சி சென்று, பச்சைமலை முருகன் கோயில் அருகே பள்ளம் தோண்டி குமார் உடலை புதைத்துள்ளனர்.
செல்போன் ஆய்வு: இந்நிலையில், குமார் வீடு திரும்பாததால், அவரது மகள் செல்போனில் தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆஃப் செய்யப்பட் டிருந்தது. மறுநாளும் குமார் வீடு திரும்பாததால் அவரது மருமகன் மோகன், தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் தாம்பரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து குமாரின் செல்போனை ஆய்வு செய்தனர்.
அதில் அவர் கடைசியாக ரவி என்பவரிடம் பேசியது தெரியவந்தது. இதையடுத்து ரவியை காவல் நிலையம் அழைத்து விசாரித்தபோது, முன்னுக்குப்பின் முரணாகப் பதிலளித்தார். போலீஸாரின் தீவிர விசாரணையில், கூட்டாளி களுடன் சேர்ந்து குமாரைக் கொலை செய்து செஞ்சி அருகே புதைத்ததை அவர் ஒப்புக் கொண்டார்.
போலீஸார் செஞ்சி விரைவு: இதையடுத்து ரவி கொடுத்ததகவலின் பேரில் அவரது கூட் டாளிகளான ஐயப்பன்தாங்கலைச் சேர்ந்த விஜய்(38), செந்தில் குமார்(38) ஆகியோரை நேற்று கைது செய்தனர். இதற்கிடையே, புதைக்கப்பட்ட குமார் உடலை, கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் தோண்டி எடுத்து, பிரேத பரிசோ தனை செய்ய தாம்பரம் போலீஸார் செஞ்சி விரைந்துள்ளனர்.