மணப்பாறை அருகே போக்சோ வழக்கால் தொழிலாளி தற்கொலை

By KU BUREAU

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே அமயபுரம், கருமகவுண்டம்பட்டியைச் சேர்ந்த சென்ட்ரிங் தொழிலாளி சேகர் (48). இவர் மீது மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 2020-ம் ஆண்டு போக்சோ வழக்கு பதியப்பட்டு, நீதிமன்ற விசாரணையில் உள்ளது.

அந்த வழக்கு இறுதி விசாரணைக்கு வர இருப்பதால், தனக்கு தண்டனை கிடைத்து விடுமோ என்ற மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் நேற்று அதிகாலை தனது வீட்டு அருகே உள்ள புளிய மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த வையம்பட்டி போலீஸார் அங்கு சென்று அவரது சடலத்தை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடற்கூராய்வுக்குப் பின் அவரது உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE