திருவிடைமருதூர் பகுதியில், 9 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் நேற்று கைது செய்தனர்.
கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜபருல்லா (61). தச்சுத் தொழிலாளியான இவர், மார்ச் 14ம் தேதி, தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுவனை வீட்டிக்குள் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும், கத்தியால் கழுத்தை அறுத்து விடுவேன் என கத்தியைக் காட்டி மிரட்டி உள்ளார்.
இது குறித்து அறிந்த சிறுவனின் பெற்றோர், திருவிடைமருதூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் அளித்த புகாரின்பேரில், போலீஸார், விசாரணை நடத்தி ஜபருல்லாவை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நேற்று கைது செய்தனர்.