கடலூர்: மங்கலம்பேட்டை அடுத்த கொக்காம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் அருள்தாஸ் (37). இவரது மனைவி கீதாவிடம், அதே ஊரைச் சேர்ந்த சங்கர் என்பவர் தகராறில் ஈடுபட்டார்.
இதை அறிந்த அருள்தாஸ் நேற்று முன்தினம் மது அருந்திய நிலையில் டிராக்டரை கொண்டு, சங்கரின் வீட்டை இடிக்க முயற்சித்ததாக கூறப் படு கிறது. இதனால் விபரீதம் ஏற்பட்டுவிடுமோ என்று அஞ்சிய கீதாவின் தாயார் அஞ்சலை, டிராக்டரை தடுக்க முயற்சித்தார். அப்போது எதிர்பாராத விதமாக டிராக்டரில் சிக்கி படுகாயமடைந்தார்.
அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து ஆலடி போலீஸார் வழக்கு பதிவு செய்து அருள்தாஸை கைது செய்தனர்.