சம்பள பாக்கியால் தீக்குளித்து இறந்த பெண்: சென்னை தனியார் நிறுவன அதிகாரி கைது

By KU BUREAU

சென்னை: வியாசர்​பாடியை சேர்ந்​த தூய்மை பணி​யாள​ரான சுமதி (37), அண்மை​யில் தி.நகர் பிர​காசம் தெரு​வில் உள்ள தனி​யார் நிறு​வனம் ஒன்​றில் பணி​யமர்த்​தப்​பட்​டார். சில நாட்​களி​லேயே பெண் பணி​யாளர் வேண்​டாம், ஆண் பணி​யாளர்​ தான் வேண்டும் என நிர்​வாகம் முடி​வெடுத்​தது. இதையடுத்​து, சுமதி பணியி​லிருந்து நிறுத்​தப்​பட்​டார்.

ஆனால், அவர் பணி செய்த நாட்​களுக்​கான சம்​பளம் கொடுக்​கப்​ப​டா​மல் தொடர்ந்து இழுத்​தடிக்​கப்​பட்​டுள்​ளது. பல முறை கேட்​டும் சும​திக்​கான நிலுவை சம்பளம் கொடுக்​கப்​பட​வில்​லை. இதனால், விரக்தி அடைந்த அவர், கடந்த 4-ம் தேதி மாலை சம்​பந்​தப்​பட்ட அலு​வலக நுழை​வாயி​லில் பெட்​ரோல் ஊற்றி தனக்​குத்​தானே தீ வைத்​துக் கொண்​டார். உடல் முழு​வதும் தீ காயத்​துடன் கீழ்ப்​பாக்​கம் அரசு மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்ட சும​தி, கடந்த 13ம் தேதி உயிரிழந்​தார்.

இந்த விவ​காரம் தொடர்​பாக தேனாம்​பேட்டை போலீ​ஸார் விசா​ரித்து வந்​தனர். இந்​நிலை​யில், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட தனி​யார் நிறுவன மனித வள மேலாண்மை மேலா​ள​ரான பழைய பெருங்​களத்​தூரை சேர்ந்த பிரீத்தி (40) என்​பவர் கைது செய்​யப்​பட்​டார். டெல்லி சென்​றிருந்த அவரை அங்கு சென்று போலீ​ஸார் கைது செய்​தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE