ரவுடி வசூல் ராஜா கொலை வழக்கில் 10 பேர் கைது!

By KU BUREAU

காஞ்சிபுரத்தில் பிரபல ரவுடி வசூல் ராஜா வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்ட வழக்கில் 10 பேரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

திருக்காலிமேடு, கே.டி.எஸ்.மணி தெருவைச் சேர்ந்த அலெக்சாண்டர் மகன் ராஜா (எ) வசூல்ராஜா (40). இவர் கடந்த மார்ச் 11ம் தேதி 1.30 மணிக்கு மர்ம நபர்களால் வெடி குண்டு வீசி கொலை செய்யப்பட்டார். இது குறித்து இவரது தாய் சரஸ்வதி (58) காஞ்சிபுரம் தாலுக்கா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகத்தின் உத்தரவுப்படி டி.எஸ்.பி. சங்கர் கணேஷ் தலைமையில் போலீஸார் பல்வேறு இடங்களில் தேடுதல் வேட்டை நடத்தினர். அவர்கள் கொலை நடத்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா, சுற்றியுள்ள பகுதிகளில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் முதலில் 5 பேரிடம் விசாரித்தனர். 10 பேர் சேர்ந்து இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இவர்களில் காஞ்சிபுரம் வள்ளல் பச்சையப்பன் தெருவைச் சேர்ந்த ராமன் (எ) பரத் (19), சிவா (19), திருக்காலிமேடு திலீப்குமார் (19), சூர்யா (19), சுரேஷ் (21), ஜாஹீர் (25), சுல்தான் (32), மோகன சுந்தரம் (18), சின்னகாஞ்சிபுரம் சரண்குமார் (20), ராணிப்பேட்டை, நெமிலி மணிமாறன் (19) ஆகிய 10 பேரை அய்யம்பேட்டையில் கைது செய்தனர். இவர்களில் பலருக்கு கை, கால்களில் முறிவு ஏற்பட்டுள்ளது.

அவர்களை பிடிக்கும் முயற்சியில் தப்பி ஓடும்போது இந்த எலும்பு முறிவு ஏற்பட்டதாக போலீஸார் தெரிவிக்கின்றனர். கைது செய்யப்பட்டவர்களிட ம் இருந்து 2 மோட்டார் சைக்கிள், 9 கத்தி, 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக மேலும் இருவருக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகக்கின்றனர். இது தொடர்பாக தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE