கரூர்: கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 30 வயதான செங்கல் சூளை தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 4 வயது மகன், 2 வயது மகள் உள்ளனர். இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்த தனது 2 வயது மகளை மாடிக்கு தூக்கிச் சென்று பாலியல் தொல்லை அளித்ததாகவும், பின்னர், சிறுமி விழித்துக்கொண்டதால் அங்கிருந்த தண்ணீர் தொட்டிக்குள் வீசிவிட்டு, பின்னர் வீட்டுக்குள் சென்று படுத்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, சிறுமியை காணாததால், அவருடைய தாய் மாடிக்கு சென்று பார்த்தபோது, சிறுமியின் உடைகள் கிடந்துள்ளன. மேலும், தண்ணீர் தொட்டிக்குள் கிடந்த சிறுமியை மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் அளித்த புகாரின்பேரில், கரூர் அனைத்து மகளிர் போலீஸார் போக்சோ மற்றும் கொலை முயற்சி வழக்குகள் பதிவு செய்து, தொழிலாளியை கைது செய்தனர்.
» ரூ.6 கோடி வரி செலுத்த மறுக்கும் பழநி தேவஸ்தானம்: காணிக்கையில் பங்கு கேட்க நகராட்சி முடிவு