வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்திய வழக்கு: புதுச்சேரி இளைஞருக்கு 2 ஆண்டுகள் சிறை

By KU BUREAU

புதுச்சேரி: புதுச்சேரி காலாப்பட்டு பகுதியைச் சேர்ந்த செல்லப்பன் மகன் செல்வ திருமால்(32). இவருக்கும் அரசு ஆரம்பசுகாதார நிலையத்தில் செவிலியராக பணிபுரியும் நந்தினி (30) என்பவருக்கும் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அப்போது 25 சவரன் நகைகள், ரூ.2 லட்சம் ரொக்கம் உள்ளிட்ட சீர்வரிசையை நந்தினி வீட்டார் செய்துள்ளனர்.

கூடுதல் வரதட்சணை கேட்டு நந்தினியை தாக்கி கொடுமைப்படுத்தியதாகவும் புகார் எழுந்தது. இதுகுறித்த வழக்கு விசாரணையானது புதுச்சேரி தலைமைக் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

விசாரணை முடிந்த நிலையில் குற்றம்சாட்டப்பட்ட செல்வதிருமாலுக்கு 2 ஆண்டு சிறையும், ரூ.500 அபராமும், கட்டத்தவறினால் ஒரு மாதம் சிறையும் விதித்து நீதிமன்ற நடுவர் சிவக்குமார் உத்தரவிட்டார். அரசு தரப்பில் வழக்கறிஞர் கணேஷ் ஞானசம்பந்தன் ஆஜரானார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE