தஞ்சை: தஞ்சாவூர் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (30). இவர், மார்ச் 11-ம் தேதி சாலையில் நின்றிருந்த 3-ம் வகுப்பு பயிலும் 8 வயது சிறுமியை, பள்ளியில் கொண்டு விடுவதாகக் கூறி, தனது மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, அப்பகுதியில் உள்ள காட்டுப் பகுதிக்குச் சென்று, சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார்.
இதுகுறித்து அச்சிறுமி அவரது பெற்றோரிடம் தெரிவித்தார். இதையடுத்து, அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் வல்லம் அனைத்து மகளிர் போலீஸார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து கண்ணனை நேற்று முன்தினம் கைது செய்தனர்.