திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் 10 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச்சென்ற மர்ம நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த அம்பூர்பேட்டையைச் சேர்ந்தவர் ஷீலா (60). இவர் தனது மருமகள் சிந்து (34) என்பவருடன் நேற்று முன்தினம் இரவு ஆம்பூரில் நடைபெற்ற உறவினர் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பினர்.
ஆம்பூர் அடுத்த செங்கிலிகுப்பம் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அருகே வந்த போது, பின்னால் தலைக்கவசம் அணிந்து இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத 2 நபர்கள், ஷீலா கழுத்தில் அணிந்திருந்த 10 சவரன் தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். நகையை பறித்த போது, இரு சக்கர வாகனம் நிலை தடுமாறியதில் ஷீலா, சிந்து ஆகிய 2 பேரும் கீழே விழுந்தனர்.
இதில், இருவரும் படுகாயம் அடைந்தனர். உடனே அவ்வழியாக சென்ற பொதுமக்கள் காயமடைந்த ஷீலா மற்றும் சிந்து ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக வாணியம் பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ஆம்பூர் கிராமிய காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
» வேளாங்கண்ணி அருகே முட்புதரில் அழுகிய நிலையில் பெண் சடலம்: உயிரிழந்தது எப்படி?
» கோவையில் அதிர்ச்சி: தீவிரவாத தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை