நாகை: வேளாங்கண்ணியை அடுத்த பாலக்குறிச்சி வயல்வெளி அருகேயுள்ள வாய்க்கால் முட்புதரில் அழுகிய நிலையில் பெண் உடல் கிடப்பதாக தகவல் கிடைத்தது. இதன்பேரில் வேளாங்கண்ணி போலீஸார் சென்று பார்வை யிட்டனர். இதில், உடலை எடுத்துச் செல்ல முடியாத அளவுக்கு அழுகி இருந்ததால், அங்கேயே உடற்கூறாய்வு மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பெண்ணின் உடல் அருகே ஜெபமாலை, காலணி ஆகியவற்றை கண்டெடுத்த போலீஸார் அவர் யார், உயிரிழந்தது எப்படி ஆகியன குறித்து விசாரித்து வருகின்றனர்.