சென்னை: தலைமைச் செயலக குடியிருப்பு பகுதியில் பெண்ணிடம் தகாத முறையில் நடந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்
இதுகுறித்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ சென்னை, கீழ்பாக்கம் பகுதியில் வசித்து வரும் 40 வயது பெண்மணி ஒருவர் சமையல் வேலை செய்து வருகிறார். மேற்படி பெண் நேற்று முன்தினம் (07.03.2025) இரவு அவரது அக்கா வீட்டிற்கு சென்றுவிட்டு, தனது வீட்டிற்கு திரும்பி செல்லும் வழியில், பராக்கா சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அங்கு திடீரென வந்த நபர் ஒருவர் மேற்படி பெண்ணிடம், தகாத முறையில் நடக்க முயன்றுள்ளார்.
அப்பெண் சத்தம் போடவே, மேற்படி நபர் அந்த பெண்ணை கீழே தள்ளிவிட்டு தப்பியோடிவிட்டார். இது குறித்து மேற்படி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் மீது போலீசார், பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரி கீழ்ப்பாக்கம் சிவகாமிபுரம் சந்தானம் மகன் பிரேம் (19) என்பவரை கைது செய்தனர்.
» 'தல மாஸ்’ - வேட்டி சட்டையுடன் தோனியின் புகைப்படத்தை பகிர்ந்தது சிஎஸ்கே!
» திருத்தணி சந்தைக்கு காமராஜர் பெயரை நீக்கி கருணாநிதி பெயரா? - அன்புமணி கண்டனம்
விசாரணையில் எதிரி பிரேம் மீது ஏற்கனவே ஒரு குற்ற வழக்கு உள்ளது தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட எதிரி பிரேம் விசாரணைக்குப் பின்னர் நேற்று (08.03.2025) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.