மலைக் கிராமத்தில் குழந்தை திருமணம்; தப்பிச் சென்ற சிறுமியை தூக்கிச் சென்ற உறவினர்: வீடியோ வைரல்

By KU BUREAU

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்​டம், ஓசூர் அரு​கே​யுள்ள மலைக் கிராமத்​தில் குழந்​தைத் திரு​மணம் நடந்த நிலை​யில், தப்பிச் சென்ற சிறுமியை தேடிப்பிடித்த உறவினர், குண்​டு​கட்​டாக தூக்கிச்சென்ற வீடியோ சமூகவலை​தளங்​களில் வைரலானது. ஓசூர் அரு​கே​யுள்ள மலைக் கிராமத்​தைச் சேர்ந்​தவர் மாதேஷ்(30). இவருக்​கும், 14 வயது சிறுமிக்​கும் கடந்த 3-ம் தேதி கர்​நாடக மாநிலத்​தில் இரு வீட்​டார் முன்​னிலை​யில் திரு​மணம் நடந்​தது. இதையடுத்​து, நேற்று முன்​தினம் மலைக் கிராமத்​துக்கு மாதேஷ் மற்​றும் சிறுமி வந்​தனர்.

இதனிடையே, திரு​மணத்​தில் தனக்கு விருப்​பம் இல்லை என்று கூறி வந்த சிறுமி, நேற்று காலை மாதேஷின் வீட்​டிலிருந்து தப்​பி, அப்​பகு​தி​யில் உள்ள ஒரு வீட்​டில் தஞ்​சமடைந்​தார். இதையறிந்த மணமகளின் உறவினர்​கள் சிறுமி தஞ்​சமடைந்த வீட்​டுக்​குச் சென்​றனர். சிறுமியை குண்​டு​கட்​டாக தூக்​கிக்​கொண்டு வீட்​டுக்​குச் சென்​றனர். அப்​போது சிறுமி கதறிஅழு​தார். இது தொடர்​பான வீடியோ சமூகவலை​தளங்​களில் வைரலானது. இதுகுறித்த புகாரின் பேரில் தேன்​க​னிக்​கோட்டை மகளிர் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​து சிறுமியின் தாயார் உட்பட 3 பேரை கைது செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE