ஆயுதப்படை காவலர் தூக்கிட்டு தற்கொலை: ஈரோடு போலீஸார் விசாரணை

By KU BUREAU

ஈரோடு: ஆயுதப்படை காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக ஈரோடு தாலுகா போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஈரோடு ஆணைக்கல்பாளையத்தில் உள்ள ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தவர் நவீன்குமார் (35). வேலூரைச் சேர்ந்த இவருக்கு திருமணமாகி, 11 வயதில் ஒரு மகன் உள்ளார். நேற்று முன் தினம் பணியை முடித்துவிட்டு, ஆயுதப்படை குடியிருப்பில் உள்ள வீட்டிற்கு நவீன் குமார் திரும்பியுள்ளார். இந்நிலையில், நவீன் குமாரின் தந்தை, அவருக்கு போன் செய்தபோது அவர் எடுக்கவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த அவரது தந்தை, ஈரோடு ஆயுதப்படை அலுவலக பிரிவுக்கு போன் செய்து, தனது மகன் காலையில் இருந்து போன் எடுக்கவில்லை என்றும், மகன் தங்கி இருக்கும் குடியிருப்புக்குச் சென்று பார்க்குமாறும் கூறியுள்ளார். அதன்பேரில் நவீன் குமார் தங்கி இருந்த குடியிருப்புக்குச் சென்று பார்த்தபோது, நவீன்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது தெரியவந்தது.

இது குறித்து தாலுகா போலீஸார், அவரது உடலைக் கைப்பற்றி பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தற்கொலை தீர்வல்ல: தற்கொலை என்பது எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு இல்லை. தற்கொலை எண்ணத்திற்கு தீர்வு தேட உடனடியாக சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண்: 044 -2464000 (24 hours), மாநில தற்கொலை தடுப்பு உதவி எண்: 104 (24 hours), ஐகால் (iCall Pychosocial) உதவி எண் - 022-25521111 (Mon - Sat, 8 am - 10 pm) எண்களுக்குத் தொடர்பு கொள்ளவும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE