நாமக்கல்லில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பரிதாப உயிரிழப்பு: என்ன நடந்தது?

By KU BUREAU

நாமக்கல்: ​நாமக்கல்லில் ஒரே குடும்​பத்​தை சேர்ந்த 3 பேர் மர்​ம​மான முறை​யில் உயி​ரிழந்​தது குறித்து போலீ​ஸார் விசா​ரித்து வரு​கின்​றனர்.

நாமக்​கல் பதி நகரைச் சேர்ந்​தவர் பிரேம்​ராஜ் (38). அங்​குள்ள தனி​யார் வங்​கி​யில் பணிபுரிந்து வரு​கிறார். இவரது மனைவி மோக​னப்​பிரியா (33), மகள் பிரிநித்தி ராஜ் (6), ஒன்​றரை வயது மகன் பிரினி​ராஜ். இந்​நிலை​யில், நேற்று மதி​யம் வரை பிரேம்​ராஜ் வீட்​டிலிருந்து யாரும் வெளியே வரவில்​லை. சந்​தேகமடைந்த அக்​கம்​பக்​கத்​தினர் ஜன்​னல் வழி​யாகப் பார்த்​த​போது, மோக​னப் பிரியா மற்​றும் அவரது மகள், மகன் இறந்​துகிடந்​தது தெரிய​வந்​தது.

தகவலறிந்து வந்த போலீ​ஸார் 3 பேரின் உடல்​களை மீட்​டு, பிரேதப் பரிசோதனைக்​காக அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர். வீட்​டில் இருந்த கடிதத்​தில், “ஆன்​லைன் விளையாட்டு மூலம் ரூ.50 லட்​சம் வரை இழந்து விட்​டேன். இதை யாரிட​மும் சொல்ல எனக்​குத் தைரியமில்​லை. எனவே 4 பேரும் தற்​கொலை செய்​து​கொள்ள முடி​வெடுத்​து​விட்​டோம். எங்​களை மன்னித்​து​ விடுங்​கள்” எனக் குறிப்​பிட்​டு, பிரேம்​ராஜ் உள்​ளிட்ட 4 பேரின் பெயர்​களும் இடம்​பெற்​றிருந்​தன. எனினும், பிரேம்​ராஜ் வீட்​டில் இல்​லை. அவரது செல்​போன் சுவிட்ச் ஆஃப் செய்து வைக்​கப்​பட்​டுள்​ளது.

உயி​ரிழந்த மூவரின் கழுத்​தி​லும் காயங்​கள் உள்​ளன. மனை​வி,மகள், மகனைக் கொன்​று​விட்​டு, ​பிரேம்ராஜ் தலைமறை​வாகி​விட்​டாரா அல்​லது மூவரும் தற்​கொலை செய்​து​கொண்ட பின்​னர், பிரேம்​ராஜ் வீட்டை விட்டு வெளி​யேறி​விட்​டாரா என்​பது உடனடி​யாகத் தெரிய​வில்​லை. இது தொடர்​பாக போலீ​ஸார் வழக்கு பதிவு செய்​து, பிரேம்​ராஜை தேடி வருகின்​றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE